தமிழகத்தில் இன்று 22வது மெகா தடுப்பூசி முகாம்: மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்தில் இன்று, 22வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள், இவ்வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.;

Update: 2022-02-12 02:00 GMT

இந்தியாவில், கடந்த ஜனவரி முதல், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இதுவரை, 21 மெகா தடுப்பூசி முகாம்களை, தமிழக சுகாதாரத்துறை நடத்தி இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று, தமிழகத்தில் 22வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதன்படி, 50 ஆயிரம் மையங்களில் காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, தடுப்பூசி முகாம் நடைபெறும். இதில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென்று, சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 97 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 70.4 சதவீதம் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 

Tags:    

Similar News