உலக செவிலியர் தினம்: மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் நர்ஸ்களுக்கு மரியாதை
அரசு மருத்துவமனையில் நர்ஸ்களுக்கு இனிப்பு வழங்கி,சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டனர்.;
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு பொது தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் திமுகவினர் இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.
நாடு முழுவதும் உலக செவிலியர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து செவிலியர்களுக்கும் மயிலாடுதுறை பொது தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் அவர்களது பணியை பாராட்டும் வகையில் இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொது தொழிலாளர் சங்க தலைவர் ஜெக.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகரன், மருத்துவர்கள் வீரசோழன், பிரதீப் குமார், செவிலியர் சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் மருத்துவமனையில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்களுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.