உலக இதய தினத்தையொட்டி மயிலாடுதுறையில் ரோட்டரி சங்கம் மருத்துவ முகாம்
உலக இதய தினத்தையொட்டி மயிலாடுதுறையில் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.;
உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது. இன்று உலக இதய தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சங்கம் சார்பில் இந்தியா முழுவதும் ஒரேநாளில் 10 லட்சம் பேருக்கு சர்க்கரை கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.
ஏசியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு சாதனை முயற்சியாக நடத்தப்படும் இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 10 ரோட்டரி சங்கங்களின் சார்பில் தலா 500 பேர் வீதம் மொத்தம் 5000 பேருக்கு ரத்த சர்க்கரை கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறையில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், கடைவீதி, கல்லூரி ஆகிய இடங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டு, உடனடியாக சர்க்கரை அளவை பொதுமக்களுக்கு தெரிவித்து, இதய நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.