மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2021-12-01 10:22 GMT

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவ அதிகாரி இராஜசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் இராஜ்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்துகொண்டு எய்ட்ஸ்க்கு எதிரான உறுதிமொழி ஏற்றுகொண்டனர். எய்ட்ஸ் இல்லா நாட்டை உருவாக்குவோம் என்றும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமல், அரவணைக்க வேண்டும் எனவும் உறுதி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News