மயிலாடுதுறை அருகே பேருந்து இல்லாமல் மாணவர்கள், பொதுமக்கள் அவதி
மயிலாடுதுறை அருகே பேருந்து இல்லாமல் மாணவர்கள், பொதுமக்கள் அவதி 3 மணி நேரத்திற்கும் மேலாக அவதி அடைந்தனர்.
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து சித்தமல்லி கிராமத்திற்கு மாலை 6 மணிக்கு புறப்பட்ட அரசுப்பேருந்தில் மாணவர்கள் பொதுமக்கள் 70க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மயிலாடுதுறை திருவிழந்தூர் அருகே சென்ற பேருந்து டயர் பஞ்சரானது. இதனால் ஓட்டுநர் பயணிகளை அங்கேயே இறக்கிவிட்டுவிட்டு பேருந்தை எடுத்து சென்றுவிட்டார். தொடர்ந்து 1மணிநேரம் தாமதமாக மாற்றுபேருந்து வந்து பயணிகளை ஏற்றி சென்றது.
மாலை 4.30மணியிலிருந்து பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் 5.30 மணிக்கு வந்த சித்தமல்லி செல்லும் பேருந்து 6.30 மணிக்கு பேருந்துநிலையத்தில் இருந்து புறப்பட்டதாகவும் பேருந்தில் ஏறிய பயணிகள் பேருந்து பஞ்சரால் அதிலும் வீட்டிற்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.
குறித்த நேரத்தில் பேருந்து வருவதில்லை என்றும் மாலை பள்ளி கல்லூரி விட்டு வீடு செல்வதற்கு தினந்தோறும் அவதியடையும் நிலையே உள்ளதாகவும்; பேருந்தில் செல்லும் மாணவர்கள் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில் பேருந்துகள் குறித்த நேரத்தில் செல்வதாகவும் உடனடியாக மாற்றுபேருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறினர். பேருந்து பற்றாக்குறையாக உள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்கமுடியவில்லை என்றும் தெரிவித்தனர்.