வனவிலங்கு வாரத்தையொட்டி மயிலாடுதுறையில் மாணவிகள் சைக்கிள் பேரணி
வனவிலங்குகள் பாதுகாப்பு வாரத்தையொட்டி மயிலாடுதுறையில் மாணவிகள் சைக்கிள் பேரணி நடத்தினர்.;
மயிலாடுதுறையில் வனவிலங்கு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஜே.சி.ஐ. தன்னார்வலர் அமைப்பு, சங்கம் சில்க்ஸ், டி.இ.எல்.சி. பள்ளி இணைந்து வனவிலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணியை நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகள் கலந்து கொண்ட இந்த சைக்கிள் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் டி.இ.எல்.சி. பள்ளி மாணவிகள் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நகரின் முக்கிய வீதிகளின் வழியாக 3 கிலோமீட்டர் தூரம் சென்று காவேரி நகரில் சைக்கிள் பேரணி முடிவடைந்தது. இதில் தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.