மயிலாடுதுறை நகரில் மாஸ்க் அணியாதவர்களுக்கு நகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சுப்பையா உத்தரவின் பேரில், மயிலாடுதுறை நகரில் மாஸ்க் அணியாமல் வருபவர்கள் மீது நகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் மாஸ்க் அணியாமல் மோட்டார்பைக்குகளில் வந்தவர்களை நகர அமைப்பு அலுவலர் நேதாஜி, சிறப்பு ஆர்.ஐ.,கள் பிரபாகரன், வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் பிச்சைமுத்து, தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்ததனர்.மேலும், அவர்களுக்கு மாஸ்க் வழங்கி அணிந்து செல்லுமாறு வலியுறுத்தினர். மாஸ்க் கையில் வைத்திருந்தும் போடாமல் மோட்டார்பைக்கில் வந்த நபர்களை எச்சரித்து மாஸ்க் அணிந்து செல்லவும் வலியுறுத்தி பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தினர்.