எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தை கண்டித்து மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கண்டித்து மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்:- மாநில ஒருங்கிணைப்பாளர் முகம்மது சர்வத்கான் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நாம் தமிழர் கட்சியினர் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முகம்மது சர்வத்கான் பங்கேற்று கண்டன உரையாற்றினார். மேலும், மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்று, விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வடமாநிலத்தவர்கள் 20 பேர் பணியமர்த்தப்பட்டதை திரும்பப் பெற வேண்டும், சுங்கச் சாவடி கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.