மயிலாடுதுறை அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

மயிலாடுதுறை அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை மயிலாடுதுறை அதிமுக முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ் திறந்து வைத்தார்;

Update: 2022-04-09 13:30 GMT

மயிலாடுதுறையில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ்

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிய நிலையில் அதிகமான வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனை தணிக்கும் பொருட்டுமக்கள்கூடும் இடங்களில் பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் நீர்மோர் பந்தல் திறந்து வருகின்றனர்.

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் கடைவீதியில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் நீர் மோர் பந்தலைத் திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் போன்றவற்றை வழங்கினார்.

மேலும் குளிர்ச்சியூட்டும் இயற்கை பழச்சாறுகள் மற்றும் நீர் பொதுமக்கள் தாகத்தை தனித்துக் கொள்ள ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனன், வி.ஜி.கண்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News