இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி குத்தாலம் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 8ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அன்று இரவு சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. அப்போது கோவிலில் இரு சமூகத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முத்துகுமார் , மாரியப்பன், சுந்தரமூர்த்தி ஆகியோர் காயமுற்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி, பாதிக்கபட்ட பட்டியலின மக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பட்டியல் இன மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத குத்தாலம் காவல்நிலையத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் குத்தாலம் கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
விடுதலை சிறுத்தை கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கு மேற்பட்ட கட்சியினர் பங்கேற்று பாதிக்கபட்டவர்களுக்கு, நியாயம் வழங்க கோரியும், தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத, குத்தாலம் காவல் கோஷம் எழுப்பினர்.