காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-02-14 13:38 GMT
மயிலாடுதுறை அருகே 7 ஆண்டு காதலித்து வந்த காதல் ஜோடியினர் இன்று திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி மாதானத்தை சேர்ந்த சிவசண்முகம்என்பவர் குமரக்கோட்டம் பகுதியை சேர்ந்த விஜய லட்சுமி என்பவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் தங்களது பெற்றோரிடம் கூறி திருமணம் செய்து வைக்க கேட்டதற்கு விஜயலட்சுமி வீட்டார் மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து மறுத்துவந்த நிலையில் இன்று காலை இருவரும் வீட்டைவிட்டுக் கிளம்பி வைத்தீஸ்வரன்கோயில் மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்று அங்கே மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்துகொண்டனர். தங்களது குடும்பத்தாரால் ஆபத்து ஏற்படும் என்று பயந்த தம்பதியினர் உடனடியாக மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுகுணசிங் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். இவர்கள் வசிக்கும் பகுதி புதுப்பட்டினம் காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா என்பவர் மீட்டிங் ஒன்றிற்கு எஸ்.பி அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

அவரை எஸ்.பி. அழைத்து இரண்டு வீட்டாரையும் அழைத்துப் பேசி சமாதானமாகப் போக செய்யவேண்டும் என வலியுறுத்தினார், தகராறு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். காதல் திருமணம் செய்த தம்பதியினர் போலீசாருடன் இணைந்து புகைப்படம் எடுத்துச் சென்றனர். காதலர் தினமான இன்று 7 ஆண்டு காதலுக்கு முடிவுகண்ட திருப்தியில் ஜோடியினர் மகிழ்ச்சியாக சென்றனர்.

Tags:    

Similar News