நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தரங்கம்பாடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

தரங்கம்பாடி நகராட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.;

Update: 2022-02-01 13:40 GMT

தரங்கம்பாடி நகராட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

தரங்கம்பாடி நகராட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் தேர்தல் நடப்பதால், வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், மதுபானங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வாக்கு சேகரிப்பதினை தடுக்கும் பொருட்டு, தரங்கம்பாடி பேரூராட்சிக்கு 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் 6:00 மணி வரையிலும் மூன்று குழுக்களாக செயல்படுவார்கள். துணை வட்டாட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் நிலையில் ஒரு அதிகாரி தலைமையில் இரண்டு காவலர்கள் மற்றும் ஒரு கேமராமேன் அக்குழுவில் செயல்படுவர். தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமையில் செயல்படும் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News