நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மயிலாடுதுறையில் திமுகவினருடன் அமைச்சர் ஆலோசனை
திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்து, வெற்றி வியூகம் குறித்து அறிவுரை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் வெற்றி வியூகம் குறித்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று பேசினார்.
மயிலாடுதுறையில் 2 நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது இத்தேர்தலை சந்திக்க தயாராகும் வகையில், சேந்தங்குடி ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சுற்றுச்சூழல்துறை காலநிலை மாற்றம் இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசினார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்து, வெற்றி வியூகம் குறித்து அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் , நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், பொருளாளர் ஜி. என் ரவி , அரசு வழக்கறிஞர்கள்,ஒன்றிய, நகராட்சி மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.