மயிலாடுதுறை: பாதாள சாக்கடை பராமரிப்பு பணியை ராஜகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு

மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பு பணியை ராஜகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2022-01-23 05:17 GMT

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பராமரிப்பு திட்டப்பணியை ராஜகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 3 வருடங்களாக பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் சாலைகளில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்படுவதுடன், ஆள்நுழைவு தொட்டிகளிலிருந்து கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து, பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து பாதாள சாக்கடை கழிவு நீரேற்று நிலையங்களிலும் மயிலாடுதுறை சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராஜகுமார் ஆய்வு நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது  மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்புப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததால் தற்போது அதனை முழுமையாக சீர்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றதன் காரணமாக, தனியாக ஒரு குழு அமைத்து, ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மழையின் காரணமாக இப்பிரச்சினையை உடனடியாக சரிசெய்ய முடியாத நிலை உள்ளது. பாதாள சாக்கடை தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் 3 மாதங்களுக்குள் முழுமையாக சீர்செய்யப்படும் என்றார்.

ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் பாலு, நகராட்சி பொறியாளர் சணல்குமார், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News