உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;
மயிலாடுதுறை அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க. ஒன்றிய இளைஞரணி சார்பில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் எழுதுகோல் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ஞானப்பிரகாசம், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலினி சிவராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.