உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;

Update: 2021-11-29 15:05 GMT

சீர்காழி அருகே உயநிதி ஸ்டாலின்  பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த அரசூர் கிராமத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், சீர்காழி ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார் பிரபாகரன் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி, தேவேந்திரன் மாவட்ட குழு உறுப்பினர் விஜயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News