மயிலாடுதுறை அருகே அரசு விரைவு பேருந்து மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு
மயிலாடுதுறை அருகே அரசு விரைவு பேருந்து மோதி 2 இளைஞகள் உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுனரை கைது செய்து போலீஸ் விசாரணை
விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர்கள்
மயிலாடுதுறை அருகே அரசு விரைவு பேருந்து மோதி இரு வாலிபர்கள் உயிரிழப்பு. ஓட்டுனரை கைது செய்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை:-
மயிலாடுதுறை அருகே திருநன்றியூர் காளிங்கராயன் ஓடை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாலையா மகன் சுரேஷ் (28) இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அய்யாப்பிள்ளை மகன் மணிகண்டன்( 27) மயிலாடுதுறையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். நண்பர்களான இருவரும் நேற்று இரவு மயிலாடுதுறையில் உள்ள நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். வாகனத்தை மணிகண்டன் ஓட்டிச் சென்றுள்ளார். சோழசக்கரநல்லூர் பகுதியை கடந்த போது எதிரே வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சுரேஷூம், மணிகண்டனும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே சுரேஷ் இறந்து விட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு விரைவு பஸ் டிரைவர், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா சூரியனார்கோவில் விஸ்வநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ்(58) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.