மயிலாடுதுறை அருகே சாலையில் அடிபட்டு கிடந்த மயிலிற்கு சிகிச்சை

மயிலாடுதுறை அருகே சாலையில் அடிபட்டு கிடந்த மயிலிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.;

Update: 2022-04-11 07:16 GMT

சீர்காழி அருகே காயம் பட்ட மயிலிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள அரையபுரம் மெயின் ரோட்டில் மாரியம்மன் கோயில் அருகில் மயில் ஒன்று சாலையை கடக்க முயன்று உள்ளது. அப்போது அங்கு வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மயிலின் மீது மோதியுள்ளது. இதனால், காயம் ஏற்பட்டு சாலையில் கிடந்த மயிலினை அங்கிருந்த சிலர் மீட்டு முதலுதவி செய்துள்ளனர்.

மயிலின் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தை பொதுமக்கள் மஞ்சள் வைத்து சரி செய்துள்ளனர். தொடர்ந்து குத்தாலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சீர்காழி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் வனக்காவலர் கலைவாணன் பத்திரமாக மயிலினை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக எடுத்துச் சென்றார்.

Tags:    

Similar News