மயிலாடுதுறை வள்ளாலகரத்தில் சார்நிலை கருவூல அலுவலக கட்டடம் திறப்பு.

மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா குத்துவிளக்கேற்றி வைத்து, அலுவலக கட்டடத்தை பார்வையிட்டார்

Update: 2021-10-25 17:45 GMT

 மயிலாடுதுறை வள்ளாலகரத்தில் முதல்வரால் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட சார்நிலை கருவூல கட்டிடம் 

தமிழக முதல்வரால் காணொலி காட்சி மூலம் மயிலாடுதுறை வள்ளாலகரத்தில் ரூ.99 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் சார்நிலை கருவூல அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வள்ளாலகரத்தில் சார்நிலை கருவூல அலுவலக கட்டிடமானது தரை தளம், முதல் தளம் என 1535 சதுர அடி பரப்பளவில்; ரூ.99 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த சார்நிலை கருவூல அலுவலக கட்டிடத்தை, சென்னையிலிருந்து தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா குத்துவிளக்கேற்றி வைத்து, அலுவலக கட்டடத்தை பார்வையிட்டார். இதில், மாவட்ட கருவூல அலுவலர் சந்தானகிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மோகனசுந்தரம், உதவி கருவூல அலுவலர் பூமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News