மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது.;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைசார்பில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட 2 திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்கினார். இதில் வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.