சீர்காழியில் மின்சாரம் மின் திறன் விழிப்புணர்வு குறித்த பயிற்சி முகாம்

சீர்காழியில் விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும் மின் திறன் விழிப்புணர்வு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.;

Update: 2022-02-23 10:53 GMT

சீர்காழியில் மின்சார பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக விவசாயிகளுக்கான மின்சிக்கனம் மற்றும் மின் திறன் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழகத்திலேயே முதல் முறையாக நடைபெற்ற இம்முகாமில் சீர்காழி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். மின் சிக்கனம் குறித்தும் மின் திறன் சேமிப்பு விழிப்புணர்வு குறித்தும் விவசாயிகளுக்கு காணொளி காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பட்டுக்கோட்டை மின் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் பேராசிரியர் சம்பத்குமார் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மின்சிக்கனம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கினார். விவசாயிகளின் சந்தேகங்கள் குறித்தும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். இந்நிகழ்வில் நாகப்பட்டினம் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ஸ்ரீதர், சீர்காழி செயற்பொறியாளர் விஸ்வநாதன், உதவி செயற்பொறியாளர்கள் விஜயபாஸ்கர்,காசிலிங்கம், அப்துல் வகாப், ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News