தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா

தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.;

Update: 2022-04-21 03:20 GMT

தரங்கம்பாடி பேராயர் மாணிக்கம் கல்லூரியில் உணவுதிருவிழா நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கிடையே பாரம்பரிய உணவு வகைகளின் சிறப்பை உணர்த்தும் வகையில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்பட்டது.

இவ்விழாவை விலங்கியல் துறையின் முன்னாள் மாணவரும் நிரவி டி.ஆர்.பட்டினம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான நாக தியாகராஜன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் ஜீன் ஜார்ஜ் முன்னிலை வகித்தார். மாணவர்கள் நவதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகளை பயன்படுத்தி ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்தனர். அதோடு உணவு வகைகளின் முக்கியத்துவத்தையும் காட்சிப்படுத்தி இருந்தனர். விழா  ஏற்பாடுகளை  விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர்கள் ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாணவர்கள்  செய்திருந்தனர். திரளாக பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News