மயிலாடுதுறையில் மறைந்த நடிகருக்கு மரக்கன்று நட்டு அஞ்சலி

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்கிற்கு மயிலாடுதுறையில் சமூக நலச்சங்கங்கத்தினர் மரக்கன்றுகளை நட்டுவைத்து, அஞ்சலி செலுத்தினர்.;

Update: 2021-04-17 10:15 GMT

பிரபல நடிகரும், சூழலியல் செயற்பாட்டாளருமான விவேக் மரணத்துக்கு மயிலாடுதுறையில் சமூக நலச்சங்க நிர்வாகிகள் பலர் ஒருங்கிணைந்து அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி மயிலாடுதுறை வரதாச்சாரியார் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அங்கிருந்து ஊர்வலமாக நடந்து சென்று மயிலாடுதுறை பேருந்து நிலையம் வாசலில் விவேக் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய அவர்கள், அப்துல் கலாமை பின்பற்றி விவேக் மரக்கன்றுகளை நட்டுவைத்தது போன்று, விவேக்கினை பின்பற்றி அவரது நினைவாக மரக்கன்றுகளை தொடர்ந்து நட்டு வைத்து பராமரிப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News