மயிலாடுதுறையில் தமிழக ஆளுநருக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்க முடிவு
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழக ஆளுநருக்கு, தருமபுரம் ஆதீனத்தின் முன்பு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.;
தமிழக ஆளுநர் ரவி, மயிலாடுதுறையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது வருகைக்கு மயிலாடுதுறை ஒருசில கட்சிகள் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அவரது வருகைக்கு பாஜக மற்றும் ஆன்மீக அமைப்புகள் ஆதரவு தெரிவித்து, அவரை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
இதற்காக தருமபுரம் ஆதீனத்தின் முன்பு பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைகளில் தேசியக் கொடியை ஏந்தி தமிழக ஆளுநருக்கு வரவேற்பு அளிக்க காத்திருந்தனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.