தியாகி தில்லையாடி வள்ளியம்மை 108-வது நினைவு தினம் அனுசரிப்பு

தியாகி தில்லையாடி வள்ளியம்மை 108-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-02-23 11:08 GMT

தில்லையாடி வள்ளியம்மை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தில்லையாடி ஊராட்சியில் தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 108வது நினைவு தினத்தையொட்டி தில்லையாடி வள்ளியம்மை திரு உருவ சிலை அமைந்துள்ள மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ .முருகதாஸ்  மாலையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்  மஞ்சுளா ,தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன் ,உதவி மக்கள் தொடர்பு அலுவலர்  அஸ்வின் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News