மயிலாடுதுறை : சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் மாமாகுடியில் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்பு

Update: 2022-05-20 16:00 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மாமாகுடியில் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் மாமாகுடியில் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் ஊர்வலமாக வந்து தீ மிதித்தனர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாமாகுடி கிராமத்தில் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 13 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து இன்று தீமிதி திருவிழா முன்னிட்டு மாலை 5- மணி அளவில் பெருமாள் கோவில் குளத்தில் இருந்து   கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க  அக்கரகாரம் வழியாக கோவிலை வந்தடைந்தது.

அதனை தொடர்ந்து சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து இரவு 6 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு பொறையார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News