தருமபுர ஆதீனத்தில் நடைபெற்ற யானை மீது திருமுறை வீதியுலா உற்சவம்

ஞானபுரீசுவரர் பெருவிழாவை முன்னிட்டு யானையின் மீது தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளை ஏற்றி நடைபெற்ற வீதியுலாவில், தருமபுரம் ஆதீனகர்த்தர் பங்கேற்பு

Update: 2024-05-24 10:59 GMT

யானையின் மீது தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளை ஏற்றி நடைபெற்ற வீதியுலா

மயிலாடுதுறை ஞானபுரீசுவரர் பெருவிழாவை முன்னிட்டு தருமபுர ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற யானை மீது திருமுறை வீதியுலா உற்சவத்தில்  யானையின் மீது தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளை ஏற்றி நடைபெற்ற வீதியுலாவில், தருமபுரம் ஆதீனகர்த்தர் பங்கேற்றார். வீடுகள் தோறும் பொதுமக்கள் பூரணகும்ப மரியாதை அளித்து வழிபாடு நடத்தினர்.

திருக்கோயிலில் 10 நாட்கள் நடத்தப்படும் உற்சவங்களில், நான்காம் நாள் திருவிழாவாக திருமுறைகளை வீதி உலா எடுத்துச் செல்வது வழக்கம். மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் கடைசியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் தருமபுரம் ஆதீனம் 25-வது குருமகா சந்நிதானம் அருளாட்சி காலத்தில் 5 யானைகளின் மீதேற்றி திருமுறை வீதியுலா நடைபெற்ற குறிப்புகள் காணப்படுகிறது. அதன்பின்னர் சில காரணங்களால் இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

இந்த ஆண்டு  ஞானபுரீஸ்வரர் பெருவிழா ஞானபுரீசுவரர் கோயிலில் மே 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் நான்காம் நாள் திருவிழாவான யானை மீதேற்றி திருமுறை வீதியுலா நிகழ்ச்சி 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட்டது. இதையொட்டி, ஆதீன திருமடத்திலிருந்து தேவாரம், திருவாசகம் ஆகிய திருமுறைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த யானையின் மீது திருமுறைகளை ஏற்றி, தருமபுரம் ஆதீன தேவார பாடசாலை மாணவர்கள் திருமுறைகளை வாசித்தவாறு செல்ல, ஆதீனத்தின் நான்கு வீதிகளின் வழியே திருவீதியுலா நடைபெற்றது.

ஆதீனத்தின் மேற்கு வாசலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், திருமுறைகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வீதி உலாவில் வீடுகள் தோறும் பொதுமக்கள் பூரணகும்ப மரியாதை அளித்து தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

Tags:    

Similar News