தில்லையாடி கிராமத்தில் தில்லையாடியின் வரலாறு நூல் வெளியீட்டு விழா

தில்லையாடி கிராமத்தில் தில்லையாடியின் வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

Update: 2022-04-11 04:41 GMT

தில்லையாடி வரலாறு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் 'தில்லையாடியின் வரலாறு" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குனர் ஜெகதீசன் எழுதிய நூலினை, சென்னை வானிலை ஆய்வு மைய ஓய்வு பெற்ற இயக்குனர் எஸ். ஆர். ரமணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெளியிட்டார்.

அதனை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், முன்னாள் எம்.பி அம்பேத்ராஜன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த நூலில் தில்லையாடி கிராமத்தை பற்றிய முழு வரலாற்றுத் தொகுப்பு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News