போலீஸ் இல்லாததால் முழு ஊரடங்கை கடைபிடிக்காத பொதுமக்கள்

மயிலாடுதுறையில் கொரோனா பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால் முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடிக்காமல் அங்கம், இங்குமாக சென்று வருகின்றனர்.

Update: 2021-05-16 03:30 GMT

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறையில் இன்று காலை முதலே வாகனத்தில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் முழு ஊரடங்கை கடைபிடிக்காமல் சாலைகளில் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.

மேலும் மயிலாடுதுறையில் கச்சேரி சாலை, சின்னக்கடை தெரு, மணிக்கூண்டு, ரயிலடி, கூறைநாடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் இல்லாததால் பொதுமக்கள் பயமில்லாமல் சுற்றித் திரிகின்றனர்.

எனவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் நடமாட்டதை குறைக்க நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News