மயிலாடுதுறை அருகே அமைச்சர் திறந்து வைத்த திருமண மண்டபம்

மயிலாடுதுறை அருகே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.;

Update: 2022-01-03 04:15 GMT

மயிலாடுதுறை அருகே தனியார் திருமண மண்டபத்தை அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி அடுத்து வள்ளகரத்தில்,தொழிலதிபர் முகமது பாருக், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் ஹேப்பி அர்சத் ஆகியோர், சிக்னேச்சர் தி கோல்டன் அக்கார்டு எனும் பெயரில்  பிரமாண்டமான திருமண மண்டபம் கட்டி உள்ளனர். இதன்  திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளி, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு திருமண மண்டபத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திறப்புவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி. செழியன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார், தி.மு.க. பொறுப்பாளர்கள், தொழிலதிபர்கள் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மண்டபம் உரிமையாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News