மயிலாடுதுறையில் தனியார் நர்சிங் கல்லூரி முகப்பு மேற்கூரை இடிந்து விழுந்தது
மயிலாடுதுறையில் தனியார் நர்சிங் கல்லூரி முகப்பு மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் உயிர்ச்சே
மயிலாடுதுறையில் தனியார் நர்சிங் கல்லூரி கட்டடத்தின் முகப்பு மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்தது. இரவுநேரம் என்பதால் அதிருஷ்டவசமாக மாணவிகள் உயிர் தப்பினர்.
மயிலாடுதுறை மாவட்டம் ,மயிலாடுதுறை பெரிய சாலியத்தெருவில் எஸ்.கே.ஸ்கூல் ஆஃப் நர்சிங் என்ற தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. அதேபகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பவருக்குச் சொந்தமான இக்கட்டடத்தில் அசோக் என்பவர் 3 வருடங்களாக இக்கல்லூரியை நடத்தி வருகிறார். இக்கல்லூரியில் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கல்லூரி நிர்வாகிகள் வழக்கம்போல் நர்சிங் கல்லூரியை பூட்டிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இரவு 8 மணி அளவில் கட்டடத்தின் முகப்பு திடீரென இடிந்து விழுந்தது. இதனால், கட்டடத்தின் தகர மேற்கூரையும் சரிந்து விழுந்தது. இரவுநேரம் என்பதால் கல்லூரியில் மாணவிகள் உள்ளிட்ட யாரும் இல்லாத காரணத்தால் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.