மயிலாடுதுறை: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-01-23 03:45 GMT

தி.மு.க. அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்காத தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செம்பனார் கோவில் ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனம், வி.ஜி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட வேண்டும், டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும், பொங்கல் தொகுப்புத் திட்டத்தை முறைகேட்டை கண்டித்தும், மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் பேரூராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி, பொதுக்குழு உறுப்பினர் கபடி பாண்டியன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணை செயலாளர் நடராஜன், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News