மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கு கடந்த 19ந் தேதி தேர்தல் அறிவிக்கபட்டு வேட்புமனுக்கள் பெற்றப்பட்டது.இதில் 3,4,5 வார்டுகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.மீதம் உள்ள 15 வார்டுகளுக்கும் கடந்த 19ந் தேதி தேர்தல் நடைபெற்றது .
இதில் தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி சார்பில் 15 உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலருமான கமலக்கண்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்து சான்றிதழ்கள் வழங்கினார். இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற தரங்கம்பாடி பேரூராட்சி வார்டு உறுப்பினர்களை வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன்,மாவட்ட பொருளாளர் ஜி. என் ரவி,ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், பி எம். அன்பழகன், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.