மயிலாடுதுறையில் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டவர் தம்பிக்கு அரசு வேலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டவர் தம்பிக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது.;

Update: 2022-04-18 11:18 GMT
மயிலாடுதுறையில் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டவர் தம்பிக்கு அரசு வேலை

வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டவரின் தம்பிக்கு பணி நியமன ஆணையை மயிலாடுதுறை கலெக்டர் லலிதா வழங்கினார்.

  • whatsapp icon

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகா மாப்படுகை கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாய தொழிலாளி கலியமூர்த்தி. இவருக்கு, விக்னேஸ், விஜயன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 29.8.20 அன்று ஏற்பட்ட சாதிய மோதலில் விஜய் என்பவர் வெட்டி கொலை செய்யபட்டுள்ளார்.இந்த கொலை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது

அதன் அடிப்படையில் இறந்த விஜய் தாயார் அமுதாவிற்கு மாதாமாதம் அரசால் ஓய்வூதியம் வழங்கி வந்துள்ளனர். அந்த வாரிசு உரிமை சட்டப்படி, இன்று, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அரசு பணி வழங்கி உள்ளார். இறந்தவரின் தம்பியான விக்னேஷ் பத்தாவது மட்டுமே படித்து உள்ளதால் மயிலாடுதுறை ஆதிதிராவிட நலத்துறை அலுவலத்தில், பணி வழங்கி, பணி ஆணையை இன்று வழங்கி உள்ளார். இதனால் அந்த குடும்பத்தினர் தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், நன்றி தெரிவித்தார்

Tags:    

Similar News