தைஅமாவாசை: மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு

தைஅமாவாசை முன்னிட்டு மயிலாடுதுறையில் உலக புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில் ஏராளமனோர் முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர்.

Update: 2022-01-31 07:27 GMT

தைஅமாவாசை முன்னிட்டு மயிலாடுதுறையில் உலக புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில் ஏராளமனோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.

தைஅமாவாசை முன்னிட்டு மயிலாடுதுறையில் உலக புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில் ஏராளமனோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவேரி துலாக்கட்டம் காசிக்கு இணையான இடமாகும். இங்கு காவிரியில் 12புண்ணிய தீர்த்தங்களும், காசியைப்போன்று விஸ்வநாதர், கேதாரநாத் ஆலயங்களும் கரையிலேயே அமைந்துள்ளது. இங்கு புனித நீராடி, தர்பணம் அளிப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

இன்று தை அமாவாசையை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், புனித நீராடியும் வழிபாட்டில் ஈடுபட்டனர். இருப்பினும் காவிரியாற்றில் குறைந்த அளவு தண்ணீர் சென்றதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

Similar News