மயிலாடுதுறை அருகே தலைச்சங்காடு கோயில் குளத்தில் அறங்காவலர் மர்ம மரணம்

மயிலாடுதுறை அருகே தலைச்சங்காடு நான்மதியப்பெருமாள் கோயில் குளத்தில் அறங்காவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.;

Update: 2021-11-08 15:16 GMT

மயிலாடுதுறை அருகே தலைச்சங்காடு நான்மதிய பெருமாள் கோவில் குளத்தில் அறங்காவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு கிராமத்தில் நான்மதியப்பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருநாங்கூரை சேர்ந்த திருவேங்கடம்(78) என்பவர் 20 வருடங்களாக அறங்காவலராக உள்ளார். இவர் நேற்று காலை கோயிலுக்கு வந்தபோது கோயிலில் நடை திறப்பதற்கு முன் கோயில் அருகே கோசாலை அமைத்து தங்கியுள்ள வெளியூரை சேர்ந்த முகுந்தன் உள்ளிட்ட 3பேர் பஜனை பாடியுள்ளனர். கோயில் நடைதிறக்காமல் பஜனை பாடக்கூடாது என்று அறங்காவலர் திருவேங்கடம் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் திருவேங்கடத்தை காணவில்லை.

உறவினர்கள் தேடிவந்த நிலையில் இன்று காலை கோயில் குளத்தில் திருவேங்கடம் மர்மமான முறையில் இறந்த நிலையில் பிணமாக மிதந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் செம்பனார்கோவில் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மேலும் அறங்காவலரிடம் தகராறில் ஈடுபட்ட கோயில் அருகே வசிக்கும் திருவள்ளுவர் மாவட்டம் ஆரணியை சேர்ந்த முகுந்தன்(24), திருவண்ணாமலை மாவட்டம் சேனியநல்லூர் அனந்தராமன், ஆற்காடு இசையனூரை சேர்ந்த குணசேகரன் உள்ளிட்ட 3 பேரை சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் பிடித்து வைத்தனர். இச்சம்பவம் அறிந்து வந்த செம்பனார்கொவில் போலீசார் திருவேங்கடம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து முகுந்தன் உள்ளிட்ட 3 பேரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோயில் அறங்காவலர் மர்மமான முறையில் குளத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News