மயிலாடுதுறை: கோயில் நிலங்களில் தல விருட்சம் மரங்கள் நடும் பணி
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோயில் நிலங்களில் தல விருட்சம் மரம் நடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் ஒன்றியம் வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் மற்றும் பெருஞ்சேரி வாகீசுவர சுவாமி கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் தல விருட்சம் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், அப்துல்மாலிக், கோயில் செயல் அலுவலர் கயல்விழி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் தி.மு.க பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.