பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்..!
ஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க மாணவர்களும் அதனை பின்பற்றி உறுதிமொழி ஏற்றனர்;
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கடக்கம் கிராமத்திலுள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்
மயிலாடுதுறை அருகே நீண்ட இடைவேளைக்குப் பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கடக்கம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் 80 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா பொது முடக்கத்தில் காரணமாக நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று பள்ளி திறக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து ஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க, மாணவர்களும் அதனை பின்பற்றி உறுதிமொழி ஏற்றனர். பின்னர், மாணவர்கள் முகக் கவசம் அணிந்தபடி, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டனர்.