மயிலாடுதுறையில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Update: 2022-01-08 06:38 GMT

டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் நிறுவன ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தி மயிலாடுதுறையில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் ராமானுஜம் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டம் ஆகியவற்றை அமல்படுத்தவும், பணிநிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், எட்டு மணிநேர வேலை, வார விடுமுறை ஆகியவற்றை அமல்படுத்தவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. இதில் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News