மயிலாடுதுறையில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம்

மயிலாடுதுறையில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு செயல்முறை விளக்கத்தை கலெக்டர் வழங்கினார்.

Update: 2021-03-06 11:01 GMT

மயிலாடுதுறையில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு செயல்முறை விளக்கத்தை கலெக்டர் பங்கேற்று வாக்காளர்கள் அளித்த வாக்கினை உறுதி செய்யும் விவிபாட் கருவி குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.

மயிலாடுதுறையில் வாக்காளர்கள் வாக்கு பதிவு இயந்திரத்தில் அளித்த வாக்கினை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விவிபாட் கருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை தேர்தல் நடத்தும் அலுவலரும், நாகை கலெக்டருமான பிரவீன் நாயர் மற்றும் மயிலாடுதுறை கலெக்டர் லலிதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை மற்றும் மயிலாடுதுறை கலெக்டர்கள் பொதுமக்களுக்கு வாக்குகளை உறுதி செய்யும் விவிபாட் கருவி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும், எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

பொதுமக்கள் தவறாமல் அனைவரும் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News