மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய விவசாய சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் செல்லப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவிரியில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள யார்காேல் அணையை உடனடியாக அகற்ற வேண்டும். 2020 -21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.