மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
மயிலாடுதுறை நகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகளுக்கு 79 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வார்டுகளில் 211 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சின்னங்கள் மற்றும் பெயர்களை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி இன்று தொடங்கியது.
மயிலாடுதுறை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலு நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியை பார்வையிட்டார். சின்னம் பொருத்தும் பணி முடிவடைந்ததும் மீண்டும் வாக்குப்பெட்டிகள் கடையில் வைத்து முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படும்.