மத்திய மண்டலத்தில் ரவுடிகள் கண்காணிப்பு: ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பேட்டி

திருச்சி மத்திய மண்டலத்தில் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார்.

Update: 2021-11-09 11:17 GMT

சீர்காழி  டி.எஸ்.பி. அலுவலகத்தில் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல போலீஸ்  ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கொரோனாவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கும்,குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் புத்தாடைகள்,இனிப்புகள் வழங்கியும், போலீஸ் பாய்ஸ்,கேர்ள்ஸ் கிளப்பில் உள்ள மாணவர்களுக்கு நோட்,புத்தகங்களையும் வழங்கினார்.

பின்னர் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நிருபர்களிடம்  பேசுகையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் எங்கெங்கு தண்ணீர் ஊருக்குள் புகும் நிலை உள்ளதோ அங்கு முக்கியத்துவம் கொடுத்து பார்த்துகொண்டுள்ளோம். அதுபோல் பொதுமக்கள் சிறுவர்கள் தண்ணீர் அதிகம் உள்ள நீர்நிலைகளில் சென்று குளித்து சிக்கிக்கொள்ளாமல் இருக்க எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ்,வருவாய்த்துறை சேர்ந்து கண்காணித்து உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை.மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் போலீசார் எந்த சூழ்நிலையும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளனர்.

தஞ்சை சரகத்திற்கு ஏ.டி.ஜி.பி. மகேஸ்குமார் அகர்வால் வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரியாக அரசால் நியமிக்கப்பட்டு அவர் மேற்பார்வையில் மீட்பு பணிகள் நடைபெற உள்ளது. ரவுடிகள் வகைப்படுத்தப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் எஸ்.பி, டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் தலைமையில் கண்காணிக்கப்பட்டு வரும் ரகசிய தகல்வகளின் அடிப்படையில் குற்றநடவடிக்கைகளில் ஈடுபடாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

கஞ்சா,லாட்டரி விற்பனை தடுக்க முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் முழு நெட்வொர்க்கை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்கவும், குறிப்பாக நிலப்பிரச்சனை தொடர்பாக குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தாசில்தார்,காவல் துறை,சர்வேயர் இணைந்து வட்ட அளவில் கமிட்டி அமைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.காவல்நிலையங்களில் காவலர்களின் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அப்போது மயிலாடுதுறை எஸ்.பி. சுகுணாசிங்,சீர்காழி டி.எஸ்.பி. லாமெக்,இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேலு,ஜெயந்தி,அமுதாராணி ஆகியோர் உடனிருந்தனர்.


Tags:    

Similar News