மயிலாடுதுறையில் சம்மர் சாம்பியன்ஷிப் போட்டி: யோகாவில் அசத்திய மோனிதா

மயிலாடுதுறையில் பள்ளியில் மாவட்ட அளவிலான சம்மர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.

Update: 2022-04-11 00:00 GMT

மயிலாடுதுறையில், தேசிய யோகா போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற மாணவி யோகா செய்துகாட்டி அசத்தினார்.

மயிலாடுதுறையில்,  தனியார் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சம்மர் சாம்பியன்ஷிப் போட்டியில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், கராத்தே, ஸ்கேட்டிங், துப்பாக்கி சுடுதல், செஸ், கேரம் உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்ற பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரியில் ஆல் ஸ்போர்ட்ஸ் அன்ட் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் கடந்த மாதம் 25 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்ற 2-வது ஓபன் நேஷனல் சேம்பியன்ஷிப் போட்டியில் 8 வயது முதல் 10 வயதுக்கானோருக்கான யோகா போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற சேந்தங்குடி ஈரோகிட்ஸ் பள்ளி மாணவி மோனிதா யோகா நிகழ்ச்சியை செய்துகாட்டி அசத்தினார். அவருக்கு அறம் செய் அறக்கட்டளை என்ற சேவை அமைப்பின் சார்பில் யோக தாரகை என்ற விருது வழங்கப்பட்டது.

Tags:    

Similar News