தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி மயிலாடுதுறையில் பொதுமக்கள் போராட்டம்

தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-12-26 05:20 GMT

மயிலாடுதுறையில் தரமற்ற ரேஷன் அரிசியுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மக்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசியில் பூச்சிகள் நிறைந்து உணவிற்கு பயன்படுத்த முடியாமல் தரமற்ற முறையில்  உள்ளதாக கூறியும், தரமான அரிசியை வழங்க வலியுறுத்தியும் கையில் பூச்சிகள் நிறைந்த தரமற்ற அரிசியை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரமற்ற அரிசி வழங்குவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கள் கண்டனத்தை பதிவு செய்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News