மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா காணொலி மூலம் ஆய்வு செய்தார்.;
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நீர் வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா மற்றும், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் ஆகியோர், கண்காணிப்பு அலுவலர்கள், நீர்வளத்துறை, வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.