நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சென்ற 2 மாணவர்கள் கடலில் மூழ்கி மாயம்
தரங்கம்பாடியில் நண்பரின் பிறந்தநாளை கொண்டாட சென்று கடலில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணி தீவிரம்;
கடலில் மூழ்கி மாயமான மாணவர்களை தேடும் பணி நடந்து வருகிறது
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஐடிஐ ஒன்றில் பயின்று வரும் மாணவர் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நண்பர்கள் பத்து பேர் தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் அனைவரும் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பின்புறமுள்ள முகத்துவாரத்தின் அருகே கடலில் குளித்துள்ளனர்.
கடல் அலை சீற்றமாக இருந்த நிலையில், மயிலாடுதுறை மெய்கண்டார் ஐடிஐ படிக்கும் மாணவர் பூம்புகார் அருகே உள்ள மேலையூரை சேர்ந்த சிவசக்தி.18, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் பயிலும் சேமங்கலத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ்(18) இருவரும் அலையில் சிக்கி மாயமாகினர்
அதனையடுத்து அவர்களது நண்பர்கள் கூச்சலிட்டவே, மீனவர்கள் அளித்த தகவலின்பேரில் கடலோர காவல் குழும ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் போலீசார் மீனவர்கள் இணைந்து படகு மூலம் மாயமான இரு மாணவர்களையும் தேடி வருகின்றனர்