தருமபுர ஆதீனம் தொடக்க பள்ளியில் மாணவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வரவேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுர ஆதீனம் தொடக்க பள்ளியில் மாணவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.;
இன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் இருபத்தி ஏழாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆதீனத்திற்கு அழைத்து இனிப்புகள் வழங்கி ஆசி வழங்கினார். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு குடைகள் வழங்கி நன்றாக படிக்க அறிவுரை கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் அதன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.