சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மாணவ மாணவிகள் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

காந்திஜி நினைவு நாளையொட்டி ஜன. 30ஆம் தேதி முதல் பிப் 13 தேதி வரை தொழுநோய் விழிப்புணர்வு வாரமாக தமிழக அரசு கடைப்பிடிக்கிறது;

Update: 2022-02-05 05:45 GMT

மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜ்குமார் தலைமையில் ஆனந்ததாதாண்டவபுரத்தில் தொழுநோய் ஒழிப்பு உறுதி ஏற்ற மாணவிகள்

மயிலாடுதுறை அடுத்த ஆனதாண்டவபுரம் தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் மாணவ மாணவிகள் காங் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த ஆனந்ததாண்டவபுரத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.  சித்த மருத்துவம் கண் மருத்துவம், பொது மருத்துவம் எலும்பு பிரிவு, பெண்கள் சிறப்பு மருத்துவம் உள்ளிட்ட 40 வகையான மருத்துவர்கள் பங்கேற்ற இந்த முகாமை, மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜ்குமார், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரதாப் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.

தேசப்பிதா காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு கடந்த 30ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தொழுநோய் விழிப்புணர்வு வாரமாக தமிழக அரசு கடைப்பிடிக்கிறது இதனை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் செவிலியர்கள் மருத்துவர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News