தபால் நிலையத்தில் வட மாநிலத்தவரை பணி அமர்த்துவதை கண்டித்து போராட்டம்
தபால் நிலையத்தில் வட மாநிலத்தவரை பணி அமர்த்துவதை கண்டித்து மயிலாடுதுறையில் முற்றுகை போராட்டம் நடந்தது.;
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக் குழுவின் சார்பில் தலைமை தபால் நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களை பணி அமர்த்தியதைக் கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ் தேசிய முன்னணியின் மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்பினர் பங்கேற்று தபால் நிலையத்தில் தமிழர்களை பணியமர்த்த வலியுறுத்தியும், வடமாநிலத்தவர்களை பணி அமர்த்திய மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். முடிவில் கோரிக்கை மனு தபால் நிலைய அதிகாரியிடம் வழங்கப்பட்டது.